For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தனிநபர் தரவு மீறல் - ரூ.250 கோடி அபராதம் இல்லையா? மத்திய அரசின் புதிய 'வரைவு விதிகள்'!

01:13 PM Jan 05, 2025 IST | Web Editor
தனிநபர் தரவு மீறல்   ரூ 250 கோடி அபராதம் இல்லையா  மத்திய அரசின் புதிய  வரைவு விதிகள்
Advertisement

மத்திய அரசு வெளியிட்டுள்ள டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்துக்கான வரைவு விதிகளில் ரூ.250 கோடி அபராத தொகை குறிப்பிடாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

மத்திய அரசு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்துக்கான 'வரைவு விதிகளை' நேற்று வெளியிட்டது. இந்த புதிய விதிகள் மீதான கருத்துகளை பிப்ரவரி 18-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. தனிநபர் தரவுகளை தவறாகப் பயன்படுத்தினால் ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யும் இந்த சட்டம் கடந்த 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போதைய மத்திய அரசு விதிகளில் ரூ.250 கோடி அபராதம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

டிஜிட்டல் தளங்களான வெப்சைட்டுகள் (ஆன்லைன் இணையதளம்), செயலிகள்  ஆகியவற்றில் தனிநபர்களின் தரவுகளை பாதுகாக்க 2019-ம் ஆண்டு Personal Data Protection Bill கொண்டு வரப்பட்டது. அப்போது இந்த தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விவாதித்து 81 திருத்தங்கள்,12 பரிந்துரைகள் இந்த மசோதா மீது வழங்கியது. இதன் அடிப்படையில் மத்திய பாஜக அரசு புதிய மசோதாவை 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும் டிஜிட்டல் தளங்களில் தனிநபரின் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்கிறது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு 14 மாதங்களுக்குப் பின் மத்திய அரசு நேற்று இந்த சட்டத்துக்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகளின்படி, டிஜிட்டல் வடிவங்களில் தனிநபரின் தரவுகளை பயன்படுத்தும் முன்னர் அவரது ஒப்புதல் மிகவும் அவசியமானதாகும். அதே நேரத்தில் குழந்தைகளின் தரவுகளை பயன்படுத்த பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாகும்.

இ காமர்ஸ் (E-Commerce), சோசியல் மீடியாக்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு தளங்கள் அனைத்தும் இந்த புதிய சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் தனிநபர் தரவுகளை டிஜிட்டல் தளங்களில் பயன்படுத்திய உடனே அழித்துவிட வேண்டும். இந்த விதிகளை மீறினால் இதற்கு முன்பு ரூ.250 கோடி அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு வெளியிட்ட புதிய விதிகளில் அபராதத் தொகை பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதால் குழப்பம் நிலவுகிறது.

மேலும் 18 வயதுக்குட்பட்டவர்கள் சோசியல் மீடியாக்களைப் பயன்படுத்த பெற்றோரின் அனுமதி கட்டாயம் தேவை. இந்நிலையில் மத்திய அரசு இப்புதிய வரைவு விதிகள் தொடர்பாக இணையதளத்தில் பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 18-ந் தேதிக்குள் இந்த தளத்தில் பொதுமக்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என்றும் இதன் அடிப்படையில் மத்திய அரசு இறுதி செய்யப்பட்ட புதிய விதிகளை வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement