மதுரையில் 350 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி - மாநகர காவல்துறை தகவல்!
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பது மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்து வழிபடுவது, ஊர்வலம், நீர் நிலைகளில் பாதிப்பு ஏற்படாத நிலையில் கரைக்க வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்பட்டது.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும். அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகர் பகுதியில் 350 விநாயகர் வைக்கப்பட உள்ளன. இதில் 192 சிலைகள் இந்து முன்னனி சார்பில் வைக்கப்பட உள்ளன. பள்ளிவாசல் பகுதிகளில் விநாயகர் சிலைகளை கொண்டு செல்லும் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
இந்தாண்டு கூடுதலாக விநாயர் சிலைகள் வைக்க அனுமதி கொடுக்கப்படவில்லை. மதுரையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் 24 இடங்களில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை ஆய்வு செய்து மாசு கட்டுப்பாட்டு வாரிய கட்டுப்பாட்டின் படி சிலைகள் செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யப்படுகிறது.