For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருவாரூர் அருகே ONGC எண்ணெய் கிணற்றை முழுமையாக மூட முடிவு!

02:39 PM Dec 16, 2023 IST | Web Editor
திருவாரூர் அருகே ongc எண்ணெய் கிணற்றை முழுமையாக மூட முடிவு
Advertisement

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில்,  அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை முழுமையாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள பெரியகுடி ஓஎன்ஜிசி எண்ணெய் மற்றும்
எரிவாயு கிணறு 2013 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது.  இக்கிணற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் வெடித்து சிதறி பேராபத்து ஏற்படும் என தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் 2015ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு இதற்கு நிரந்தர தடை பெறப்பட்டது.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண்
மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு அனுமதி பெறாத கிணறுகளை செயல்படுத்தவோ, பழுது பார்க்கவோ,  சீரமைக்கவோ கூடாது என தமிழ்நாடு அரசு கொள்கை விளக்க குறிப்பு முடிவெடுத்து அறிவித்துள்ளது.  இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் அடர்த்தியான ஹைட்ரோ கார்பன் எரிவாயு இங்கு இருப்பதால்,  சட்டவிரோதமாக எடுப்பதற்கு மறைமுகமாக ஓஎன்ஜிசி எடுத்த முயற்சிகள் அனைத்தும் விவசாயிகள் போராட்டங்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் தொடர் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாக இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மன்னார்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து,  நேற்று 15ம் தேதி மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில் விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் சமாதான பேச்சுவார்ததையில் பங்கேற்றனர்.

முடிவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும்
விவசாயிகள் தரப்பில் காரியமங்கலம் முகமது,  விக்கிரபாண்டியம் எஸ்விகே சேகர்
ஆகியோர் குழுவில் இணைக்கப்பட்டு இக்குழு முன்னிலையில் அக்கிணறுகளை நிரந்தரமாக மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

கிணற்றில் உள்ள அதிகப்படியான எரிவாயு அழுத்தத்தினை படிப்படியாக குறைத்து, வாயுவை முழுமையாக வெளியேற்றி கிணற்றை பாதுகாப்பான நிலையில் வைப்பதற்கு 39 நாட்கள் ஆகும் என ஓஎன்ஜிசி நிர்வாகத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 39 நாட்களுக்கு பிறகு கிணற்றை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.  கண்காணிப்பு குழு
ஆய்வின் போது காவல்துறையினர் பாதுகாப்பும்,  தீயணைப்பு துறையினர் பாதுகாப்பும் கிணற்றை மூடும் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்,  இதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement