"மக்கள் திமுகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்" - டிடிவி தினகரன் பேட்டி!
தஞ்சை தெற்கு மாவட்ட செயலர்கள் கூட்டம் பட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "வரும் சட்டமன்ற தேர்தலில் அமமுக, பாஜக கூட்டணியில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுமா என்பது டிசம்பர் மாத இறுதியில் தெரியவரும்.
தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தர செய்ய வேண்டும் என தனது கைப்பட கடிதம் எழுதினார். ஆனால் தற்போது முதலமைச்சராக இருந்து கொண்டு அவர்களை கைது செய்கிறார்.
தூய்மை பணியாளர்கள் மட்டுமல்ல மருத்துவர்கள் ,போக்குவரத்து ஊழியர்கள், அரசு ஊழியர்கள் விவசாயிகள், நெசவாளர்கள் ஆகியோருக்கு தேர்தலுக்கு முன்பு அறிவித்த எவ்வித வாக்குறுதிகளையும் திமுக அரசு தற்போதுவரை நிறைவேற்ற வில்லை. மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விட்டது. இந்த ஆட்சி உண்மையிலேயே முடிவுக்கு வரும், மக்கள் இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள். பேரறிஞர் அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இவர்களை தவிர்த்து விட்டு தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.