Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பிரதமர் மோடிக்கு வாக்களிக்க தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள்" - மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு!

08:44 PM Apr 12, 2024 IST | Web Editor
Advertisement

"பிரதமர் மோடிக்கு வாக்களிக்க தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள்" என மதுரையில்  நடைபெற்ற வாகன பேரணியில் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மதுரையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வருகை தந்தார்.

 முன்னதாக தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த அவர் அதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் திருமயம் சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்து இன்று மாலை மதுரை நேதாஜி சாலையில் தொடங்கி, தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குதூண் ஜங்சன் வரையில் நடைபெறும் வாகன பேரணியில் பங்கேற்பதாக திட்டமிடப்பட்டிருந்தது.

மழை காரணமாக திருமயம் கோயில் சாமி தரிசன நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து உள்துறை அமைச்சர் பெருங்குடி பகுதியில் உள்ள தனியார் தங்கு விடுதிக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார். இதன் பின்னர் மதுரை நேதாஜி சாலை பகுதியில் நடைபெறக்கூடிய ரோட் ஷோவில் பங்கேற்றார்.

மதுரை நேதாஜி சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் இருந்து வெங்கலகடை தெரு வரையில் வாகன பிரச்சாரம் நடைபெற்றது. அமித்ஷாவின் வாகன பேரணியை ஒட்டி மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன பிரச்சாரம் நடைபெறும் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரையில் வாகன பேரணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது..

” மதுரை சகோதர சகோதரிகளுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கொட்டும் மழையிலும் கூட பாஜக வேட்பாளர் சீனிவாசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளீர்கள் அதற்காக பாரதிய ஜனதா கட்சி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இந்த முறை அதிமுக திமுக இரண்டு கூட்டணியையும் விட்டுவிட்டு 40 தொகுதிகளிலும் பாஜக தனியாக நிற்கிறது.

அதிமுக திமுக இருவருடைய ஊழல் காரணமாக தமிழகம் எந்த அளவிற்கு வளர்ச்சி பெற வேண்டுமோ அந்த வளர்ச்சியை பெறவில்லை என்பது தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை உருவாக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நேரம் வந்துவிட்டது தற்போது தமிழக மக்களும் மோடிக்கு வாக்களிக்க வந்து விட்டீர்கள்.

பாஜக மட்டும் தான் தமிழ் வளர்ச்சி, தமிழக வளர்ச்சி  என  அக்கறை செலுத்தும் கட்சி.  தமிழகத்தின் கௌரவத்தை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பறைசாற்றி கொண்டிருப்பவர் மோடி. நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் உங்களிடம் தமிழில் பேச முடியவில்லை என்ற வருத்தம் என்னிடம் இருக்கிறது. விரைவில்  உங்களிடம் தமிழில் பேசுவேன்.” என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Tags :
Amith shaBJPElection2024MaduraiMinister Amith ShahRoad Show
Advertisement
Next Article