Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஜம்மு காஷ்மீர் மக்கள் பாஜகவிற்கு பாடம் புகட்டியுள்ளனர்” - நியூஸ்7 தமிழுக்கு விசிக தலைவர் #Thirumavalavan பிரத்யேக பேட்டி!

03:20 PM Oct 08, 2024 IST | Web Editor
Advertisement

“பாஜகவிற்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் மிகப்பெரிய பாடத்தை புகட்டியுள்ளனர்” என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்தார்.

Advertisement

ஹரியானா, ஜம்மு -காஷ்மீர் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஹரியானாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக அங்கு ஆட்சியை பிடிக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இத்தேர்தல் முடிவுகள் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் எம்பி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“ஜம்மு காஷ்மீரில் நாம் எதிர்பார்த்தது போல இந்தியா கூட்டணி, தேசிய மாநாட்டு கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய பாடத்தை ஜம்மு காஷ்மீர் மக்கள் புகட்டி உள்ளார்கள். அதேபோல ஹரியானாவில் நாம் வெற்றி பெறவில்லை. கருத்துக்கணிப்புகளும் சொன்னது போல நடக்கவில்லை.

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் சிதறி போய் தனித்தனியாக நின்றதால் வாக்குகளும் சிதறிப் போய்விட்டன. இனி வரும் மாநில சட்டசபை தேர்தல்களில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடம்.

ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்றால் கூட, வலுவான எதிர்க்கட்சி அங்கே உருவாகியுள்ளது. பிற கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இருந்தால், பாஜகவின் வெற்றியை தடுத்திருக்க முடியும். மக்கள் அதற்கு தயாராக இருந்தால் கூட, சில அரசியல் கட்சிகள் அதற்கு தயாராக இல்லை. காங்கிரஸ் பிற கட்சிகளை ஒருங்கிணைப்பதில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.

அகில இந்திய அளவில் இளைஞர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க முன்வருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில்100 இடத்தில் வெற்றி பெற்றதும், வாக்கு சதவீதத்தை அதிகரித்ததும் அதற்கு ஒரு சான்று” என திருமாவளனவன் தெரிவித்தார்.

Tags :
assembly electionsBJPharyanaINDIA Alliancejammu kashmirRahul gandhiVCK
Advertisement
Next Article