Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் கைது! - 500 கிலோ வெடி மருந்து பறிமுதல்!

08:09 AM Jul 15, 2024 IST | Web Editor
Advertisement

சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் 
கைது செய்து 500 கிலோ வெடி மருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பெரியார் காலனியை சேர்ந்தவர் பால்பாண்டி(48).
இவர் நடத்தி வரும் அட்டை குழாய் கம்பெனியில் சட்டவிரோதமாக பட்டாசு
உற்பத்தியில் ஈடுபடுவதாக, சிவகாசி கிழக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல்
கிடைத்தது. அதன் பேரில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆனந்த
குமார் தலைமையிலான காவல்துறை சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது, தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசுகளை உற்பத்தி செய்தது தெரிய வந்தது. மேலும் அங்கு பட்டாசு தயாரிக்க தேவையான மூலப் பொருளான சுமார் 500 கிலோ வெடி மருந்து இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பால்பாண்டி, செல்வகுமார்(45), பாண்டித்துரை(40) ஆகிய 3 கைது செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் :அம்பானி வீட்டுத் திருமணவிழா - அழைப்பிதழ் இல்லாமல் நுழைய முயன்ற 2பேர் கைது!

சம்பவ இடத்தில் விருதுநகர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, டிஎஸ்பி சுப்பையா,
பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் தனி வட்டாட்சியர் திருப்பதி, வட்டாட்சியர்
வடிவேல் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் சட்டவிரோதமாக
பட்டாசு உற்பத்தி செய்த இடத்தில் இருந்து சுமார் 500 கிலோ வெடி மருந்து கைப்பற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
#residential areaarrestedCrackersExplosivesillegalPeoplePoliceseizedsivakasi
Advertisement
Next Article