For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களே உஷார் | இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்!

09:20 AM May 04, 2024 IST | Web Editor
மக்களே உஷார்   இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்
Advertisement

இன்று முதல் கத்திரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. 

Advertisement

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் அடுத்த 25 நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெயிலின் உச்சம் கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

ஆண்டுதோறும் மே மாதம் முற்பகுதியில் தொடங்கும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆனது 25 நாட்கள் நீடிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று தொடங்கி வரும் மே 28ஆம் தேதி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் இயல்பை விட 9 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் இந்த நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ள சேலம்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement