மக்களே உஷார்... பெண்ணின் உயிரை பறித்த பலாப்பழம்! நடந்தது என்ன?
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள திருச்சிலிங்காடி பகுதியைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவரது மனைவி மினி (வயது 53). இவர்களுக்கு நிகேஷ் மற்றும் நிஷாந்த் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மினி கடந்த 3ம் தேதி வீட்டின் முன்பு நின்று துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அருகே இருந்த பலா மரத்தில் இருந்து பலாப்பழம் ஒன்று எதிர்பாராத விதமாக மினியின் தலையில் விழுந்தது.
இதையும் படியுங்கள் : சென்னை | மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு… விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!
இதில் தலையில் படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மினி உயிரிழந்தார். இதுகுறித்து கோழிக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலாப்பழம் தலையில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு பிறகு பலா மரத்திற்கு கீழ் அமர்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே தென்னை மரத்திற்கு கீழ் அமர்வதை தவிர்க்க வேண்டும் என்று பலரும் கூறுவது குறிபிடத்தக்கது.