"நூறு நிமிடம் பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப தயாராக இல்லை" - தமிழிசை சௌந்தரராஜன்!
கோவை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. இவ்வளவு நாட்கள் கொள்ளையடித்ததெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். இவர்களுக்கு வாக்கு வேண்டும் என்பதற்காக இப்போது பதவி விலக வேண்டும் என கூறுகிறார்.
சிறுநீரகங்களை கடத்தி இருக்கிறார்கள். வெளிநாட்டினருக்கு நமது நாட்டின் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் வைக்கப்பட்டு இருக்கிறது. திமுகவினர் ஒருவர் நடத்தும் பிரமாண்ட மருத்துவமனையில் வெளிநாட்டவர், மிகப்பெரிய ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து இடங்களிலும் பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் போது ஸ்டாலின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பத்து நிமிடம் பேச வேண்டும் என்கிறார்.
10 நிமிடம் அல்ல நூறு நிமிடம் பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப தயாராக இல்லை. காங்கிரஸ்காரர்கள் ஓட்டுக்காக ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சருக்கு இறுதி மரியாதை செய்ததைக் கூட பெருமையாக தான் பேசுவீர்களா?
அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் விரிசலே இல்லை, அப்பட்டமான ஓட்டு அரசியல் திமுக முன்னெடுக்கிறது அவ்வளவுதான். பிறந்த குழந்தைகளை கீழே படுக்க வைக்கிறார்கள். டாஸ்மாக்கை ஒழிக்கிறேன் என்றீர்களே என்ன ஆயிற்று என திமுகவினரை பெண்கள் கேட்க வேண்டும்.
பத்து நிமிடம் இவர்கள் பொய் சொல்வதற்கு பதிலாக அந்த வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஐயா சொல்ல வேண்டும். ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு டாஸ்மாக் மூலமாக 6000 பிடுங்குகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி 1500 ரூபாய் கொடுக்கட்டும். ஆனால் டாஸ்மாக்கை கட்டுப்படுத்துவார்" என்று தெரிவித்துள்ளார்.