For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மயில் போல பொண்ணு ஒன்னு....” - திரைத்துறையில் பவதாரிணி கடந்து வந்த பாதை..!

12:54 PM Jan 26, 2024 IST | Jeni
“மயில் போல பொண்ணு ஒன்னு    ”   திரைத்துறையில் பவதாரிணி கடந்து வந்த பாதை
Advertisement

திரையுலகில் மெல்லிசைக் குரலால் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட பவதாரிணியின் வாழ்க்கைப் பயணத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம்....

Advertisement

நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் பிடித்தவர் இளையராஜா. நீண்ட காலம் தமிழ் சினிமா ரசிகர்களை வேறு இசையமைப்பாளரிடம் செல்லாத வகையில் தன்னுடைய இசையால் கட்டிப்போட்டவர் இளையராஜா.  ‘இசைஞானி’ என்று போற்றபடும் அவரது மகள் பவதாரிணியும் இசை உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருப்பவர்.

பவதாரிணி, தன்னுடைய மெல்லிய குரல் வளத்தால் இளசுகளை கட்டி போட்டவர். இளையராஜாவின் இசையில் ராசையா ப டத்தில் இடம் பெற்று இருக்கும் மஸ்தானா மஸ்தானா பாடல் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர். தன்னுடைய திரை இசை பயணத்தின் தொடக்கம் முதலே தந்தை இளையராஜா, அண்ணன் கார்த்திக் ராஜா, தம்பி யுவன் ஷங்கர் ராஜா இசையில் பயணித்தவர்.காதலுக்கு மரியாதை படத்தில் இன்றும் இளசுகளால் ரசிக்கப்படும் ‘என்னை தாலாட்ட வருவாளா’ என்ற பாடல் பவதாரணிக்கு கைவசமாக அமைந்த பாடல் என்றே சொல்லலாம். இளையராஜா இசையில் வெளியான பாரதி படத்தில்  ‘மயில் போல’ என்ற பாடல் அவருக்கு தேசிய விருது வாங்கி கொண்டுத்தது. தன்னுடைய குரலின் தனி தன்மையே பவதாரணியை தனியாக அடையாளப்படுத்தும். அழகி படத்தில் அவர் பாடிய ‘ஒளியிலே தெரிவது’ பாடல் மிகப்பெரிய அளவிற்கு பேசப்பட்டது.

எம்.குமரன் படத்தில் வரும் ‘அய்யோ அய்யோ’ பாடல், தாமிரபரணி படத்தின் ‘தாலியே தேவையில்ல’ போன்ற பாடல்கள் பவதாரணியின் ஹிட் லிஸ்ட்.  அதேபோல், ஆயுத எழுத்து படத்தின் ‘யாக்கைத் திரி’, காக்க காக்க படத்தின் ‘என்னைக் கொஞ்சம் மாற்றி’ போன்ற தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க பாடல்களை அவர் பாடியுள்ளார். ப்ரெண்ட்ஸ் படத்தில் ‘தென்றல் வரும் நிலவே’, மாநாடு படத்திலிருந்து ‘மெஹரசைலா’ பாடல், ஒருநாள் ஒரு கனவு படத்தில் ‘காற்றில் வரும் கீதமே’ பாடலும் ரசிகர்களை மெய் மறந்து கேட்க வைக்கும். அதே போல் அனேகன் படத்தில் ‘ஆத்தாடி ஆத்தாடி’ பாடல் என்றும் பிளேலிஸ்டில் நம்பர் ஒன்.2002 ஆம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரெண்ட்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இந்தியில் ரேவதி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, சல்மான் கான் ஆகியோர் நடிப்பில் வெளியான 'ஃபிர் மிலெங்கே' என்ற படத்திலும் இசையமைத்தார்.

இந்நிலையில் 47 வயதாகும் பவதாரிணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி ஜனவரி 25ம் தேதி மாலை 5.30 மணி அளவில் காலமானார். இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி மற்றும் ஜனவரி 28 ஆம் தேதி 'இளையராஜா லைவ் இன் கான்செர்ட்' என்ற பெயரில் இசை கச்சேரி நடைபெறவிருந்தது. அந்த நிகழ்வுக்காக இலங்கை சென்ற இளையராஜாவுக்கு இது எதிர்பாராத சோகம் தான்.பவதாரிணி இறப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றன. பவதரணியின் உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement