PBKSvsRR | 10 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றி - புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப்!
ஐபிஎல் லீக் சுற்றில் இன்று(மே.18) பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 70 ரன்களும், ஷஷாங்க் சிங் 59 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களும் அடித்தனர். இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை குவித்தது.
இதையடுத்து 220 ரன்களை இலக்காக கொண்டு ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் பவர் ப்ளேவில் அதிரடி காட்டினர். இதையடுத்து 40 ரன்கள் அடித்து ஹர்பிரீத் பிராரிடம் சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார். தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் 50 ரன்கள் அடித்து ஹர்பிரீத் பிராரிடம் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து வந்தவர்களில் துருவ் ஜூரெல் மட்டுமே அதிகபட்சமாக 50 ரன்கள் அடித்தார் மற்றவர்கள் இலக்குக்கு ஏற்ப ஆடமுடியாமல் தடுமாறி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் அடித்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் பஞ்சாப் அணி 17 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.