ஆஸ்கர் பரிந்துரையில் #LaapataaLadies | இயக்குநர் பாயல் கபாடியா மகிழ்ச்சி
"லாபதா லேடீஸ் " திரைப்படம் ஆஸ்கார் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என இயக்குநர் பாயல் கபாடியா தெரிவித்தார்.
அமீர் கான், கிரண் ராவ், கோதி தேஷ்பாண்டே ஆகியோர் தயாரிப்பில் பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ‘லாபதா லேடீஸ் ‘. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரே ரயிலில் பயணம் செய்யும் புதிதாக திருமணமான இரண்டு பெண்கள் தவறுதலாக வெவ்வேறு இடங்களுக்கு சென்று விடுவதால் ஏற்படும் குழப்பங்களும், அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளுமே இப்படம்.
எளிமையான ஒரு கதையின் வழியாக கிராமப் புறங்களில் பெண்கள் ஒடுக்கப்படும் விதம், அவர்களின் உணர்ச்சிகள், முன்னேற்றத்துக்கான வேட்கை, சமத்துவம் மற்றும் காதலை மிக அழகாக இப்படத்தில் பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார் கிரண் ராவ்.
ஆஸ்கர் விருதின் சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் போட்டியிட இந்தியா சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு படம் பரிந்துரைக்கப் படுவது வழக்கம். இந்த ஆண்டு, ஆமிர்கான் தயாரிப்பில் அவரின்முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய ‘லாபதா லேடீஸ்’ என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : YOLO | #Kanguva திரைப்படத்தின் 2வது பாடல் – Promo இணையத்தில் வைரல்!
இந்நிலையில் 97-வது ஆஸ்கர் விருதுக்கு ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படம்’ என்ற பிரிவில் இந்தியா சார்பில் ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்ட குறித்து "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" திரைப்படத்தின் இயக்குநர் பாயல் கபாடியா நேர்காணலில் பேசியிருந்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
"லாபதா லேடீஸ் " என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆண்டு நிறைய நல்ல திரைப்படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.மேலும், "லாபதா லேடீஸ் " படம் வேடிக்கையான மற்றும் அற்புதமான திரைப்படமாக இது அமைந்துள்ளது"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.