ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை!
சென்னை சென்ரல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் சக நோயாளிகளிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்
ஏற்படுத்தியது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், உயிரிழந்தவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் (40) என தெரியவந்துள்ளது.
கூலி வேலை செய்துவந்த குமார் வயிற்றில் ஏற்பட்ட கட்டியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து இதற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இந்தப் பெருங்கட்டி புற்றுநோயாளிக்கு வருபவை என யாரோ ஒருவர் சொன்னதின் அடிப்படையில், இன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அவரது உடல் பிரேத உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.