Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஆட்டு கொட்டகை வேறு.. குஷ்புவை கைது செய்து வைத்திருந்த இடம் வேறு..” - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

10:40 AM Jan 04, 2025 IST | Web Editor
Advertisement

ஆட்டு கொட்டகை வேறு குஷ்புவை கைது செய்து வைத்திருந்த இடம் வேறு என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

சென்னையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் வீதி வீதியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். இந்த நிலையில் 3வது நாளாக துறைமுகம் மற்றும் எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை, உட்வார்ப்பு மற்றும் நேவல் மருத்துவமனை சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

தொடர்ந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்றாவது நாளாக பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறோம். வீடு வீடாக சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டு வருகிறோம், சாலை அமைத்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

மழையால் நவம்பர், டிசம்பர் மாதத்தில் சாலை போடும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. ஜனவரி மாதம் தொடங்கியுள்ளதால் அனைத்து பகுதிகளிலும் சாலை போடும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆயிரம் முதல் 6000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. தற்போது 3000 சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணிகள் நடைபெற்றுக் வருகிறது. மீதமுள்ள பணிகள் வரும் காலங்களில் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்." இவ்வாறு பேசினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“பொதுமக்கள் கூறும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது. இந்த நிகழ்விற்கு பொதுமக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஆடுகளோடு நடிகை குஷ்புவை அடைக்கவில்லை, முன்னறிவிப்பு இல்லாமல் போராட்டம்
நடத்தும் பொழுது மக்களுக்கு ஏற்படும் துன்பங்களையும் கணக்கிட வேண்டும். திடீரென்று நடைபெறும் போராட்டத்தால் அருகில் இருக்கும் இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அவர்கள் கைது செய்யப்படாமல் உடனடியாக ஜாமீனில் வெளியே விட்டு விடுகிறார்கள். ஆட்டு கொட்டகை வேறு குஷ்புவை கைது செய்து வைத்திருந்த இடம் வேறு. இந்த ஆட்சியில் ஆயிரக்கணக்கான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
announcedChennaiCorporationMayor PriyaMinisterMunicipalpatchworkroadsSekarBabuunderway
Advertisement
Next Article