விமான நிலைய ஓடுதளத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்ட பயணிகள் | வெளியான அதிர்ச்சி காட்சிகள்...!
மும்பை விமான நிலைய ஓடுதளத்தில் அமர்ந்து பயணிகள் இரவு உணவு சாப்பிடும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் நேற்று கடுமையான பனிமூட்டம் நிலவியதால் பல விமானங்கள் தாமதம் ஆனது. 10 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன. இதனால், பயணிகள் பலரும் விமானம் தாமதம் குறித்து கேள்வி எழுப்பியதால் டெல்லி விமான நிலையத்தில் ஒருவித பரபரப்பான சூழலே காணப்பட்டது.
அதே நேரம் சில பயணிகள் டெல்லி விமான நிலையத்தின் செக் இன் கவுண்டர்களுக்கு சென்று எப்போதுதான் விமானம் புறப்படும் என விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதமும் செய்தனர்.
இதேபோல் இண்டிகோ விமானம் பல மணி நேரம் தாமதம் ஆனதால் பயணி ஒருவர் விமானியை கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானியை தாக்கிய பயணி கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நேற்று நடைபெற்ற இந்த சம்பவம் விமானிகளின் பாதுகாப்பு உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
When was the last time u saw a langar at Airport runway?These r passengers of @IndiGo6E 2195 Goa-Delhi who after 12 hours delayed flight got diverted to Mumbai having dinner just next to indigo plane. @airvistara @flyspicejet @airindia can use this 4 ads.@JM_Scindia @DGCAIndia pic.twitter.com/GLo6YyaS1D
— Supreme Leader (@tHeMantal) January 14, 2024
இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ 6இ 2195 விமானத்தில் இருந்த பயணிகள் தரையிறங்கிய வேகத்தில் ஓடுதளத்துக்கு அருகில் உள்ள டார்மாக் (விமானங்கள் நிறுத்தும் இடம்) பகுதியில் அமர்ந்தபடி உணவும் உண்டனர். இந்த காட்சி இணையத்தில் விடியோவாக வெளியாகி வைரலானது.