For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மாநில உரிமைகளை மதிக்கக்கூடிய அரசு மத்தியில் அமைய வேண்டும்" - கனிமொழி எம்.பி. பேச்சு!

11:45 AM Feb 26, 2024 IST | Web Editor
 மாநில உரிமைகளை மதிக்கக்கூடிய அரசு மத்தியில் அமைய வேண்டும்    கனிமொழி எம் பி  பேச்சு
Advertisement

மாநில உரிமைகளை மதிக்கக் கூடிய அரசு மத்தியில் அமைய வேண்டும் என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

Advertisement

2024 மக்களவை தேர்தலையொட்டி,  தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  இக்குழு பிப்ரவரி 5-ம் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளை பெறும் பணியை தொடங்கியது.  உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற தலைப்பில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு வருகிறது.

இதையடுத்து, இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் எம்.பி கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.  இதில்,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பரிந்துரைகளை அளித்தனர்.

இதையும் படியுங்கள் : உறுதியானது பாஜக – தமாகா கூட்டணி : இணைந்து தேர்தலை எதிர்கொள்வதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு!

வணிகர் சங்கங்கள்,  விவசாயிகளின் பிரதிநிதிகள்,  நெசவாளர்கள்,  மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர்,  தொழிற்சங்கங்கள்,  மாணவர் சங்கங்கள்,  கல்வியாளர்கள்,  அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள்,  தொண்டு நிறுவனங்கள்,  திமுக நிர்வாகிள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் நேரில் தங்கள் கோரிக்கைகளை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை கனிமொழி எம்.பி.  சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

"பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து,  அவர்கள் முன்வைத்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளோம்.  இது அரசியல் வெற்றியை முன்வைக்கக்கூடிய தேர்தல் அல்ல.  வரும் நாடாளுமன்ற தேர்தலின் மூலம் மாநில உரிமைகளை மதிக்கக்கூடிய அரசு அமைய வேண்டும்.  மக்களை மதிக்கக்கூடிய ஆட்சி அமைய வேண்டும்" இவ்வாறு கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

Tags :
Advertisement