Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் மன்னிக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது" - சோனியா காந்தி!

03:39 PM Dec 20, 2023 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் சம்பவம் குறித்து சோனியா காந்தி அதிரடியாக பேசியுள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், டிச. 13 ம் தேதி பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்த அந்த நபர்கள், கண்ணீர் புகை குப்பிகள் போன்ற பொருளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பரவியது. இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள் : “மூன்று நாட்களாக உணவு, தண்ணீர் இல்லை..!” - கோரம்பள்ளம் பகுதி மக்கள் சாலை மறியல்

அதனை தொடர்ந்து, நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இரு அவையிலும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 141 எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.  மேலும், இடை நீக்கத்தை நடவடிக்கையை கண்டித்து இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையின் முன்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைதொடர்ந்து, காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சோனியா காந்தி கூறியதாவது;

"பாஜக அரசால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது. நியாயமான கோரிக்கைகளை எழுப்பியதற்காக முன்பு எப்போதும் இல்லாத வகையில் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் மன்னிக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது. இதுவே பாஜக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இந்த சம்பவத்தை மோசமாக கையாண்டிருப்பார்கள்" என தெரிவித்தார்.

Tags :
BJPCongressParliamentary violationsonia gandhispeech
Advertisement
Next Article