"நாடாளுமன்ற தேர்தலை ஜனநாயக கடமையாக பார்க்க வேண்டும்" - காங். வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பேட்டி!
நாடாளுமன்ற தேர்தலை ஜனநாயக கடமையாக பார்க்க வேண்டும் என திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஈகுவார்பாளையம், சூரப்பூண்டி, ஏடூர், சுண்ணாம்பு குளம், பண்பாக்கம், கவரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருவள்ளூர் நாராளுமன்ற தேர்தலில் I.N.D.I.A. கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையும் படியுங்கள் : லக்னோவை வீழ்த்தியது டெல்லி - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
இதில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பேசுகையில், "நாடாளுமன்ற தேர்தலை தேர்தலாக பார்க்க கூடாது. ஜனநாயக கடமையாக பார்க்க வேண்டும். இது ஒரு சித்தாந்த போர்"என கூறினார்.