For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"எடப்பாடி பழனிச்சாமி கட்சியை உடையாமல் பார்த்துக் கொண்டால் அவருக்கு பாதுகாப்பு" - கனிமொழி எம்பி பேட்டி!

மணிப்பூரில் 2027 ஆம் ஆண்டு தேர்தல் வரவுள்ளதால் பிரதமர் மணிப்பூர் செல்கிறார் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
01:21 PM Sep 13, 2025 IST | Web Editor
மணிப்பூரில் 2027 ஆம் ஆண்டு தேர்தல் வரவுள்ளதால் பிரதமர் மணிப்பூர் செல்கிறார் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
 எடப்பாடி பழனிச்சாமி கட்சியை உடையாமல் பார்த்துக் கொண்டால் அவருக்கு பாதுகாப்பு    கனிமொழி எம்பி பேட்டி
Advertisement

தூத்துக்குடியில் ஏ ஐ தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "முதன் முதலில் கம்ப்யூட்டர் தொடர்பான பாலிசியை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. ஐடி பாலிசியை கொண்டு வந்தவர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள துணை குடியரசு தலைவருக்கு ஏற்கனவே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளோம்.

Advertisement

அவர் நடுநிலையோடு சிறப்பாக செயல்பட வேண்டும். ஜனநாயகத்தை
காப்பவராக, குறிப்பாக தமிழ்நாடு உரிமைகளை, ஜனநாயகத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர் சிறப்பாக செயல்பட வேண்டுமென வாழ்த்துகிறேன்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அணியினரும் மாறி வாக்குகள் விழுந்து உள்ளது. சில நேரங்களில் சில குழப்ப நிலை ஏற்படும். கூட்டணி பற்றி பேசுவதற்கு முன்பு அவருடைய கட்சி உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது அவருக்கு பாதுகாப்பாக இருக்கும். மணிப்பூரில் 2027-இல் தேர்தல் வருகிறது.

அது அவருக்கு மணிப்பூரை நினைவுபடுத்துகிறது. பலமுறை நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசிய பின்பும் போகவில்லை. இப்பொழுது தேர்தல் வர இருப்பதால் பிரதமர் மணிபூர் செல்கிறார். வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்" என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement