For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் - ஆந்திராவில் போட்டியிட ஆர்வம் காட்டாத பாஜகவினர்!

06:38 PM Jan 28, 2024 IST | Web Editor
நாடாளுமன்ற தேர்தல்   ஆந்திராவில் போட்டியிட ஆர்வம் காட்டாத பாஜகவினர்
Advertisement

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வியூகங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆந்திர மாநிலத்தில் பாஜக சார்பில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன. ஆனால் ஆந்திராவில் எந்த கட்சியும் கூட்டணி குறித்து இன்னும் பேசவில்லை. ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக தெரிகிறது.

இந்நிலையில், ஆந்திராவில்  கூட்டணியில் போட்டியிடுமா அல்லது தனித்து போட்டியிடுமா என்னும் குழப்பத்தில் பாஜக உள்ளது. ஆந்திராவில் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு சில இடங்களை தவிர பல தொகுதிகளில் போட்டியிட பாஜகவினர் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து மிகச் சிலரே தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் காக்கிநாடாவை சேர்ந்த பீடாதிபதி பரிபூராணந்த சுவாமி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் அவர்  செய்தியாளர்களிடம் பேசியதாவது..

” பாஜகவில் சேர்ந்து நான் போட்டியிட விரும்புகிறேன். கட்சி தலைமை அறிவித்தால், ஆனந்தபூர் மாவட்டம், இந்துப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிற்க தயாராக உள்ளேன். இதுகுறித்து பாஜக தலைவர்களிடம் பேசி வருகிறேன் ” என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement