5ம் கட்ட மக்களவைத் தேர்தல் - 57.47% வாக்குகள் பதிவு!
நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவில் 57.47% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நான்கு கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவடைந்த நிலையில், இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. ஐந்தாம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேஷம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட என மொத்தம் 6 மாநிலங்கள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 49 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், இன்றிரவு 8 மணி நிலவரப்படி மொத்தம் 57.47% சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக விவரங்கள்:
பீகார் ( 5 தொகுதிகள் ) – 52.60 சதவீதம்
ஜம்மு - காஷ்மீர் ( 1 தொகுதி ) - 54. 49 சதவீதம்
ஜார்க்கண்ட் ( 3 தொகுதிகள் ) - 63 சதவீதம்
லடாக் ( 1 தொகுதி ) - 67.15 சதவீதம்
மகாராஷ்டிரா ( 13 தொகுதிகள் ) - 48.88 சதவீதம்
ஒடிசா ( 5 தொகுதிகள் ) - 60.72 சதவீதம்
உத்தரப் பிரதேசம் ( 14 தொகுதிகள்) - 57.79 சதவீதம்
மேற்கு வங்கம் ( 7 தொகுதிகள்) - 73 சதவீதம்