For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" - பிரதமர் நரேந்திர மோடி!

11:23 AM Nov 25, 2024 IST | Web Editor
 கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்    பிரதமர் நரேந்திர மோடி
Advertisement

குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை தொடங்கி உள்ளது. இன்று தொடங்கி, டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது பிரதமர் பேசியதாவது:

"நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆக்கபூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த குளிர்கால கூட்டத்தொடரில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

மக்கள் பயனடையும் வகையில் கூட்டத்தொடரை எம்.பி.க்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மக்கள் தங்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க மக்கள் நம்மை தேர்வு செய்து அனுப்பியுள்ளனர்.

இதையும் படியுங்கள் :நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! அதிரடியாக குறைந்த தங்கம் விலை – எவ்வளவு தெரியுமா?

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எதிர்க்கட்சிகள் எப்போதுமே செயல்பட்டதில்லை. அதுவும், காங்கிரஸ் எப்போதுமே மக்களுக்காக நாடாளுமன்றத்தில் பேசியதில்லை. எதிர்க்கட்சியினர் இனியாவது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாடாளுமன்றத்தின் மாண்புகளைப் பின்பற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் பொறுப்புடன் செயல்படக்கூடிய முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆனால் சில எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்கின்றன. நாடாளுமன்றத்தின் அலுவல்கள் சுமுகமாக நடைபெற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நாடாளுமன்றத்தின் அலுவல் நேரத்தை மாண்புடன் பயன்படுத்துவதில் இந்தியாவின் சர்வதேச மரியாதையும் உள்ளது"

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Tags :
Advertisement