தொடங்கியது நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா்!...
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் இரு அவைகளிலும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வருகிற 22-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த டெல்லியில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் 23 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் 15 நாட்கள் அலுவல் நாட்களாக இருக்கும். இந்த 15 நாட்களில் மொத்தம் 21 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த கூட்டத்தொடர் தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 17-வது நாடாளுமன்றத்தின் நிறைவு கூட்டத்தொடர் ஆகும். எனவே இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
4 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி இருக்கிறது. இது இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிரொலிக்கும். இதன் காரணமாக பாரதிய ஜனதா, காங்கிரஸ் இடையே நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் வகையில் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
அது போல காஷ்மீர் சீரமைப்பு சட்டமசோதா, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, தபால் துறை சட்ட மசோதா போன்றவற்றிலும் ஆளுங்கட்சிகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. எனவே இந்த கூட்டத்தொடர் அனல் பறக்கும் வகையில் இருக்கும்.