நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 -ல் விவாதம்!
நாடாளுமன்றத்தில் ஜூலை 21 முதல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது . மேலும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை இக்கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் வணிகக் கப்பல் மசோதா, தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா போன்ற 8 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் தொடர்ந்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது வாரத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து 16 மணிநேரம் விவாதிக்க நாடாளுமன்றத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் லண்டன் பயணம் முடிந்த பிறகு நடைபெறும் ஜீலை 29 ஆம் நாள் 16 மணி நேர விவாததில் பிரதமர் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரம் மாதம், ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே 7ஆம் இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தேதி தாக்குதல் நடத்தின. இதனைத் தொடர்ந்து இரு நடுகளுக்கும் இடையே எல்லை பதற்றங்கள் ஏற்ப்பட்டது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான தாக்குதலை மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.