ஐபோன் 15 வாங்கித்தர மறுத்த பெற்றோர் - வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டதாக கூறிய சிறுமி...!
ஐபோன் 15-ஐ வாங்கித் தர மறுத்த பெற்றோரிடம், ‘நீங்கள் என் வாழ்க்கையை நாசமாக்குகிறீர்கள்’ என்று 11 வயது சிறுமி ஒருவர் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் மிகவும் புகழ் பெற்ற செல்போன் உற்பத்தி நிறுவனம் ஆப்பிள். ஐபோன், லேப்டாப், ஐபேட்ஸ் என கேட்ஜெட் சந்தைகளில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை ஆப்பிள் நிறுவனம் நடத்தி வருகிறது. ஆப்பிள் செல்போன்களை பொறுத்தவரை ஹைடெக் பாதுகாப்பு வசதியோடு, பிரைவசியிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டது ஆகும். இதனால், ஐபோன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். பெரும்பாலும் விஐபிக்கள், பிரபலங்கள் பலரும் ஆப்பிள் பிராண்ட்களையே பயன்படுத்தி வருவதை காண முடியும்.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 15 மாடலை அறிமுகப்படுத்தியது. ஐபோன் 15 மாடல் கடந்த ஆண்டு அறிமுகமான A6 பயோனிக் சிப் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களிலும் கூட ஐபோன் 15-ன் மூலம் சிறந்த படங்களை எடுக்க முடியும்.
இதையும் படியுங்கள்: “ரஜினிகாந்த் சங்கி இல்லை!” – ‘லால் சலாம்’ இசைவெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேச்சு!
அதற்காக ஐபோன் 13 மாடலை தேர்ந்தெடுத்தோம். ஆனால் என் மகள் ஐபோன் 15 மாடலை வாங்கித் தருமாறு கூறினாள். ஐபோன் 15 மாடலின் விலை மிகவும் அதிகமாக உள்ளதால், நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டோம். அதனால் கோபமடைந்த என் மகள், அவளின் வாழ்க்கையை நாங்கள் நாசமாக்கிவிட்டதாக கூறுகிறாள்" என்று தெரிவித்துள்ளார்.
AITA for ruining my daughters life
byu/Able_Text5286 inAITAH
குடும்பத்தின் பொருளாதார நிலையையும், சூழ்நிலையையும் பல குழந்தைகள் புரிந்து கொள்ளாமல், பெற்றோரிடம் கோபப்படுவதாகவும், பொறுமையும்,ஏற்றுக்கொள்ளும் தன்மையும் இன்றைய தலைமுறையினரிடம் குறைந்து வருவதாகவும், இந்த பதிவை கண்ட இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.