#Paralympics2024 | வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்குத் தகுதி!
பாராலிம்பிக் வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
17-ஆவது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைப் பெற்று 13வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், கலப்பு இரட்டையருக்கான வில்வித்தை போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஹர்விந்தர் சிங் மற்றும் பூஜா ஜத்யன் ஆகிய இருவரும் கலந்துக்கொண்டனர். இந்த ஜோடி முதல் சுற்றில் 31-18 மற்றும் 35-24 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர், இரண்டாவது சுற்றில் 27-33 மற்றும் 24-33 என்ற புள்ளிகள் கணக்கில் பின்னடைவை சந்தித்தது.
முடிவில் இந்த ஜோடி 16-5 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் டேமோன் கெண்டன் ஸ்மித்-அமண்டா ஜென்னிங்ஸ் ஜோடியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் மற்றும் பூஜா ஜத்யன் காலிறுதிக்கு முன்னேறினர். ஆடவருக்கான வில்வித்தை போட்டியில் இந்திய அணிக்கு முதல் தங்கம் வென்று தந்த ஹர்விந்தர் சிங் பூஜாவுடன் இணைந்துள்ளதால் இரண்டாவது பதக்கத்தை இந்த இணை வெல்லும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.