For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டிசம்பர் 10 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா விளையாட்டுப் போட்டி!

03:54 PM Nov 23, 2023 IST | Web Editor
டிசம்பர் 10 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா விளையாட்டுப் போட்டி
Advertisement

மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 1,350க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.  அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள், துப்பாக்கிச்சூடு, வில்வித்தை, கால்பந்து, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல் போட்டி என மொத்தம் 7 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதையும் படியுங்கள்: ‘கங்குவா’ படப்பிடிப்பில் விபத்து – உயிர்தப்பிய நடிகர் சூர்யா!

இதுகுறித்து அமைச்சர் அனுராக் தாக்குர் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள விடியோவில் கூறியிருப்பதாவது, "நாட்டில் முதன்முறையாக கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புதுடெல்லியில் இந்திய விளையாட்டுத் துறை ஆணையத்தின் 3 திடல்களில் மொத்தம் 7 பிரிவுகளில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் திருப்புமுனையாக அமையும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஐஜி திடல், துக்ளகாபாத் மற்றும் ஜேஎல்என் திடலில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்சௌவில் நடைபெற்ற ஆசிய பாரா வீராங்கனைகளான ஷீடால் தேவி, விளையாட்டுப் போட்டிகளில் ஜொலித்த நட்சத்திர வீரர், பாவினா பட்டேல், ஏக்தா பியான், நீரஜ் யாதவ், சிங்ராஜ், மணீஷ், சோனல், ராகேஷ் குமார் மற்றும் சரிதா ஆகியோர் தங்களுடைய சொந்த மாநிலங்கள் தரப்பில் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement