For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு... 14 காளைகளை அடக்கி பார்த்திபன் முதலிடம்!

விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. 
06:15 PM Jan 15, 2025 IST | Web Editor
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு    14 காளைகளை அடக்கி பார்த்திபன் முதலிடம்
Advertisement

இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தை முதல் நாளன்று மதுரை அவனியாபுரத்தில் நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதனையடுத்து, இன்று (ஜன.15) மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் இன்று காலை 7.40 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Advertisement

இதில் 1000-க்கும் பேற்பட்ட காளைகள் மற்றும் 900-ற்கும் மேற்பட்ட மாடுபுடி வீரர்களும் கலந்து கொண்டனர். மகாலிங்க சாமி மடத்து கமிட்டி கோயில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்தனர்.

Palamedu Jallikattu – 8th round completes... 44 injured, 4 qualify for the final round!

போட்டியில் சிறந்து விளங்கும் காளை மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மழையையும் பொருட்படுத்தாமல் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச் சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சீறி வந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். இந்த நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தற்போது நிறைவடைந்தது. இதில் நத்தம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் 14 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்துள்ளார்.

                         பார்த்திபன்                                   துளசி                                          பிரபா

பாலமேடு ஜல்லிக்கட்டு

(G 64 ) - நத்தம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் 14 காளைகளை பிடித்து முதலிடம்

(L 37) - மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசி 12 காளைகளை பிடித்து இரண்டாமிடம்

(O 235 ) - பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபா 11 காளைகளை பிடித்து மூன்றாமிடம்

(P 353) - பெரிய ஊர்சேரியைச் சேர்ந்த பால்பாண்டி 9 காளைகளை பிடித்து நான்காமிடம்

Tags :
Advertisement