For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஓடிடியில் வெளியானது அரண்மனை 4!

09:41 PM Jun 21, 2024 IST | Web Editor
ஓடிடியில் வெளியானது அரண்மனை 4
Advertisement

அரண்மனை 4 திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது.

Advertisement

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அரண்மனை.  இந்த படம் பிரமாண்ட வெற்றி பெற்றது.  இதனைத்தொடர்ந்து அரண்மனை படத்தின் 2-ஆம் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.  முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தொடர்ந்து அரண்மனை 3 வெளியானது. இத்திரைப்படத்தில் சுந்தர் சி,  ஆர்யா,  ராசி கன்னா,  ஆண்ட்ரியா,  விவேக்,  யோகிபாபு என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர்.

நகைச்சுவை கலந்த ஒரு திகில் படமாக உருவாகிய இப்படத்திற்கு சுந்தர் சி – குஷ்பூ இணைத்து அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க  உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட்  ஜெயன்ட் மூவிஸ்’  மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.  இதனையடுத்து படத்தின் நான்காம் பாகம் மே 3 ஆம் தேதி வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றது.

இந்த பாகத்திலும் சுந்தர் சி நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் தமன்னா,  ராஷி கண்ணா,  யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.  அவ்னி சினிமேக்ஸ் பி லிமிடட் சார்பில் குஷ்பு  தயாரித்திருக்கிறார்.  இத்திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தகவல் வெளியாகியது.  இந்த நிலையில்,  அரண்மனை 4 திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement