ரூ.100 கோடி வசூலித்த அரண்மனை 4!
அரண்மனை 4 திரைப்படம் வெளியான 19 நாள்களில் உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை. இந்த படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து அரண்மனை படத்தின் 2ம் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தொடர்ந்து அரண்மனை 3 வெளியானது. இத்திரைப்படத்தில் சுந்தர் சி, ஆர்யா, ராசி கன்னா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர்.
நகைச்சுவை கலந்த ஒரு திகில் படமாக உருவாகிய இப்படத்திற்கு சுந்தர் சி – குஷ்பூ இணைத்து அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.
இதனையடுத்து படத்தின் நான்காம் பாகம் மே 3 ஆம் தேதி வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றது. இந்த பாகத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அவ்னி சினிமேக்ஸ் பி லிமிடட் சார்பில் குஷ்பு தயாரித்திருககிறார்.
இந்த நிலையில், இப்படம் வெளியான 19 நாள்களில் உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் வெளியான தமிழ்ப் படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படம் இதுவாகும்.
https://x.com/khushsundar/status/1793260688426537216