Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சாதாரண மக்களுக்கு பக்கோடா, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அல்வா!’ - மத்திய அரசை சாடிய காங்கிரஸ்!

03:24 PM Nov 29, 2024 IST | Web Editor
Advertisement

குறைந்த- நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்தியா அண்டை நாடுகளைவிட பின்தங்கியுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மத்திய பாஜக அரசை சாடியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

சர்வதேச தொழிலாளர் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட 2024-2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊதிய அறிக்கையின் மூலமாக, இந்தியாவில் ஊதிய ஏற்றத்தாழ்வு குறித்த சில தகவல்களை கண்டறிய முடிந்துள்ளது.

1). இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 சதவிகிதத்தினர், குறைவாக வருமானம் ஈட்டும் கடைசி 10 சதவிகிதத்தினரைவிட 6.8 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள். இது பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மியான்மர் உள்பட நமது அண்டை நாடுகளை ஒப்பிடுகையில் முற்றிலும் சமமற்றதாகும்.

https://twitter.com/Jairam_Ramesh/status/1862358938177638750

2). குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் பெரும்பாலான தொழிலாளர்கள் முறைசாரா, குறைந்த ஊதியம் கொண்ட சுயதொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஊதியத்தில் ஏற்றத்தாழ்வு அதிகமுள்ளது.

தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக பிரதமர் மோடி உருவாக்கிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுதான் இது. சாதாரண மக்களுக்கு பக்கோடா, தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் அல்வா!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
BJPCongressGlobal Wage Report 2024-2025jairam rameshNarendra modi
Advertisement
Next Article