For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Pakistan | குவெட்டா ரயில் நிலைய குண்டு வெடிப்பு - பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

08:27 AM Nov 10, 2024 IST | Web Editor
 pakistan   குவெட்டா ரயில் நிலைய குண்டு வெடிப்பு   பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
Advertisement

பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் நேற்று (நவ.9) காலை பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதனால் அங்கிருந்த மக்கள் அங்கும் இங்கும் ஓடினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. உடனடியாக மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14 ராணுவ வீரர்கள் 13 பேர் பொதுமக்கள் ஆவர்.

மேலும், 60க்கும் மேற்பட்டோர காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குவெட்டா ரயில் நிலையத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் ஏராளமான ராணுவ வீரர்கள் காத்திருந்த நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு நடந்தது தெரியவந்தது.

பயங்கரவாதி ஒருவா் தன் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தியுள்ளதும் தெரியவந்துள்ளது. அவரின் உடலும் அடையாளம் காணப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை படை என்ற அமைப்பு, பொறுப்பேற்றுள்ளது. ‘பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை. ராணுவ வீரர்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தினோம்’ என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடா்ந்து குவெட்டா நகரம் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்துப் பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பொதுமக்கள் ஒன்றுதிரள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement