பாகிஸ்தான் | ‘தனது சகோதரியை திருமணம் செய்துகொண்ட நபர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘Boom’
பாகிஸ்தானில் ஒரு நபர் தனது சகோதரியை திருமணம் செய்துகொண்டதாக பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
பாகிஸ்தானின் கராச்சியில் ஒரு சகோதரர் தனது சகோதரியை திருமணம் செய்ததாக பொய்யான புகாருடன் திருமணமான ஜோடியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், கிராஃபிக் பாகிஸ்தானிய செய்தி நிறுவனமான ARY NEWS இன் லோகோவும் உள்ளது.
மேலும், பாகிஸ்தானின் திருமண இணையதளமான 'ZAWAJ Marriage Bureau'-ன் ஒரு விளம்பரத்தின் இந்த வைரலான படம் என்பதை BOOM ஆய்வு செய்து கண்டறிந்தது.
வைரலான அந்த கிராஃபிக் காட்சியில் வெவ்வேறு போஸ்களுடன் 2 படங்கள் உள்ளன. அதில், 'பாகிஸ்தானின் கராச்சியில், எங்கள் சமூகத்தில் எல்லாம் நியாயம்’ என்று கூறி, தனது சொந்த சகோதரியை ஒரு சகோதரர் திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்த புகைப்படம் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் என பல சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
https://www.facebook.com/photo.php?fbid=1007877831366657&set=a.473576108130168&type=3&ref=embed_post
https://www.threads.net/@kashinath7767/post/DEocohBSa3v
உண்மை சோதனை:
வைரலான படத்தில் பாகிஸ்தான் செய்தி நிறுவனமான ARY NEWS இன் லோகோ இருந்தது. எனவே, ARY NEWS இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களான (ட்விட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம்) ஆகியவற்றில் வைரலான படத்துடன் இந்தச் செய்தி தேடப்பட்டது. ஆனால் இந்த வைரல் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த செய்தியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்குப் பிறகு, பூம் இந்த வைரலான படத்தை கூகுள் லென்ஸ் மூலம் தேடியதில், இது பாகிஸ்தானின் திருமண இணையதளமான ' ZAWAJ - Marriage Bureau ' இல் காட்டப்பட்ட ஒரு விளம்பரத்தின் காட்சிப் படம் என்பதைக் கண்டறியப்பட்டது.
இந்த வைரல் கிராபிக்ஸின் 2 படங்களையும் ZAWAJ - Marriage Bureau இன் இணையதளத்தில் காணலாம். இங்கிருந்து தான் வைரலான படங்களுடன் பொய்யான பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
ZAWAJ – Marriage Bureau இன் முகநூல் பக்கத்தில், அதன் முகவரி Sial Kot என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பக்கத்தின் பயோவில், 'பாகிஸ்தானில் உள்ள சிறந்த மேட்ரிமோனியல் இணையதளங்களில் ஒன்றான ஜாவாஸில் உங்கள் சரியான பொருத்தத்தை சந்திக்கவும். நாடு முழுவதும் உங்களுக்கு பொருத்தத்தை எளிதாகக் கண்டறியவும்.’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
'ஜவாஜ்' என்பது அரபு வார்த்தை, அதாவது திருமணம்.
Note : This story was originally published by ‘Boom’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.