பத்ம பூசன் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து அவரது நடிப்பில் அண்மையில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே அவ்வப்போது ரேஸில் கவனம் செலுத்தி வரும் அவர், அஜித் குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியை தொடங்கி, தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வந்தார். அண்மையில் நடந்த கார் ரேஸில் அஜித் குமார் ஓட்டிய கார் தலைகீழாக சுழன்று விபத்துக்குள்ளானது. நல்வாய்பாக அவர் அதிலிருந்து மீண்டு வந்தார்.
தொடர்ந்து அஜித் குமார் மத்திய அரசு வழங்கிய பத்ம பூசன் விருதை பெறுவதற்கு குடும்பத்தினருடன் டெல்லி சென்றார். அங்குள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, அஜித் குமாருக்கு விருதை வழங்கினார்.
விருதை வாங்கி கொண்டு நேற்றிரவு அஜித் குமார் சென்னை திரும்பினார். இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்பட்டுள்ளார். உடல்நல பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.