13 தமிழர்களுக்கு பத்ம விருதுகள் - மத்திய அரசு அறிவிப்பு
76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக சுகாதாரம், விளையாட்டு, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களை மத்திய அரசு பத்ம விருகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டில் மொத்தமாக மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதில் பத்ம விபூஷன் விருதுகள் 7 நபர்களுக்கும் , பத்ம பூசன் விருதுகள் 19 நபர்களுக்கும், பத்ம ஸ்ரீ விருதுகள் 113 நபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து நடிகர் அஜித் குமார் , ஷோபனா சந்திரகுமார் , நல்லி குப்புசாமி செட்டி ஆகியோருக்கு கலைப் பிரிவில் பத்ம பூசன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பத்ம ஸ்ரீ விருதுகள் ரவிச்சந்திர அஸ்வின்(கிரிக்கெட்) , எம்.டி.ஸ்ரீனிவாஸ்(அறிவியல்) , தாமோதரன் (சமையல் , குருவாயூர் துரை(கலை) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனி விஸ்வநாதன்(கல்வி) , ஆர்.ஜி.சந்திர மோகன்(தொழில்), ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி (கலை), வேலு ஆசான்(கலை), புரிசை கண்ணப்ப சம்பந்தன் (கலை) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தாண்டு மொத்தமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் பத்மா விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.