ரஜினிகாந்தின் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில் ரீரிலீசாகும் படையப்பா...!
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அபூர்வராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கும் அறிமுகமான ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு, இந்தி என இதுவரை 170 படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹாலிவுட்டில் வெளியான ’பிளட்ஸ்டோன்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். திரைத்துறையில் தனது 50 ஆவது ஆண்டை ரஜினி காந்த் நிறைவு செய்துள்ளார்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில் அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, ரஜினியின் பிளாக்பஸ்டர் வெற்றித் திரப்படமான “படையப்பா” திரைப்படத்தை ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படையப்பா திரைப்படம் 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இணைந்து நடித்திருந்தார். மேலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு ப்ரிதும் பாராட்டப்பட்டது. மேலும் படையப்பா படம் அன்றைய காலகட்டத்தில் 200 திரையரங்குகளில் வெளியாகி 150 நாட்களைக் கடந்து, இந்தியளவில் மாபெரும் வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் படையப்பா திரைப்படம் தற்போதைய டெக்னாலஜியில் 4K தரத்தில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, நவீன ஒலி அமைப்புடன், புத்தம் புது பொலிவுடன், தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த செய்தி ரஜினிகாந்தின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.