ஜெய்ஸ்வால், விராட் கோலி அபாரம் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா அசத்தல்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பரிக்கா அணி 47.5 ஓவர்களில் 270 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக டி காக் 106 ரன்கள் அடித்தார்.
இதனை தொடர்ந்து 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி களமிறங்கியது. இந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - யஸ்யஸ்வி ஜெயிஷ்வால் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேலும் யஸ்யஸ்வி ஜெயிஷ்வால் சதம் விளாசி 121 பந்துகளில் 116 ரன்கள் குவித்து அசத்தினார். மறுபுறம் ரோகித் சர்மாவும் அரைசதம் அடித்தார். 73 பந்துகளில் 75 ரன்கள் குவித்த ரோகித் சர்மா கேசவ் மஹராஜ் பதில் அவுட் ஆனார்.
இதனையடுத்து வந்த விராட் கோலியும் அதிரடி ஆட்டத்தை தொடங்கி அரை சதம் விளாச 39.5 ஒவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.