‘பிர்சா முண்டா’ குறித்து அப்டேட் கொடுத்த பா.ரஞ்சித்!
பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக உள்ள 'பிர்சா' திரைப்படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
19-ம் நூற்றாண்டில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆங்கிலேயர்களிடமும் உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த, பழங்குடி மக்களுக்காகப் போராடியவர் பிர்சா முண்டா. இவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் ‘அறம்’ படத்தின் இயக்குநர் கோபி நயினார் ஈடுபட்டார். அவரைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தங்கலான் புரமோஷனுக்காக மும்பை சென்ற ரஞ்சித்திடம் ‘பிர்சா’படத்தின் படப்பிடிப்பு எப்போது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த ரஞ்சித்,
பிர்சா முண்டா படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைப்பாடுகள் முடிவடைந்துவிட்டன. நடிகர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்துள்ளார். இது ரஞ்சித் இயக்கவுள்ள முதல் ஹிந்திப்படம் ஆகும். தங்கலான் ஹிந்தியில் செப்.6ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.