For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அதீத நம்பிக்கைதான் பாஜகவின் தோல்விக்கு காரணம் ” - யோகி ஆதித்யநாத்!

11:39 AM Jul 15, 2024 IST | Web Editor
“அதீத நம்பிக்கைதான் பாஜகவின் தோல்விக்கு காரணம் ”   யோகி ஆதித்யநாத்
Advertisement

அதீத நம்பிக்கை தான் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றம் அளித்ததாக அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

Advertisement

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 18-வது நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக நினைத்த வெற்றியைப் பெறவில்லை. 2019 தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றிய பாஜக இந்த தேர்தலில் வெறும் 33 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு உத்தரப் பிரதேசத்தில் நேற்று பாஜகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உத்தரப் பிரதேச மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள், ஊராட்சி தலைவர்கள், மேயர்கள், பாஜக உறுப்பினர்கள், பாஜக தலைவர் நட்டா ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல், 2017 மற்றும் 2022 சட்டப்பேரவை தேர்தலில் குறிப்பிட்ட வெற்றியைப் பெற்று, எதிர்க்கட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்ததோடு நாம் எதிர்பார்த்த முடிவை பெற்றோம். கடந்த தேர்தல்களை போலவே மாநிலத்தில் 2024 தேர்தலிலும் வாக்கு சதவீதம் பெற்றோம்.

ஆனால் அதீத நம்பிக்கையும், வாக்கு மாற்றமும் நமது எதிர்பார்ப்புகளை புண்படுத்தியது. முன்பு வென்டிலேட்டரில் இருந்த எதிர்க்கட்சிகளுக்கு இப்போது கொஞ்சம் ஆக்ஸிஜன் கிடைத்துள்ளது. எதிர்க்கட்சிகளும், வெளிநாட்டினரும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி நமக்கு எதிராக சதி திட்டம் தீட்டினர். அதனால் சமூக வலைதளங்களை பாஜகவினர் கண்காணிக்க வேண்டும். நம் மீது வைக்கப்படும் அபாண்ட குற்றச்சாட்டுகளுக்கு துரிதமாக பதில் தர வேண்டும். பட்டியல் சமூகத்தை சேர்ந்த தலைவர்களுக்கு கட்சி தரும் மரியாதையை சுட்டிக்காட்ட வேண்டும்.

2019-ல் மிகப்பெரிய கூட்டணியை வீழ்த்தி இருந்தோம். எதிர்வரும் 10 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எம்.பி முதல் கவுன்சிலர் வரை அனைவரும் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும். 2027 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணியை இப்போது தொடங்க வேண்டும். அதன் மூலம் மீண்டும் பாஜக கொடியை உயர பறக்க செய்ய வேண்டும்” என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Tags :
Advertisement