Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2 ஆண்டுகளில் பதிவு செய்த 2.38 லட்சத்தில் 32 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை! எங்கு தெரியுமா?

10:34 AM Feb 15, 2024 IST | Web Editor
Advertisement

குஜராத் மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் 2.38 லட்சம் இளைஞர்கள் வேலைக்காக பதிவு செய்த நிலையில், 32 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் 2.38 லட்சம் இளைஞர்கள் வேலைக்காக பதிவு செய்த நிலையில்,  32 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.
அரசு வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட 32 இளைஞர்களில்,  அகமதாபாத்தை சேர்ந்தவர்கள் 22 பேர்,  பாவ்நகரை சேர்ந்தவர்கள் 9 பேர்.  மற்றொருவர் காந்தி நகரில் உள்ளார்.

இதையும் படியுங்கள் : இந்தோனேஷியா பொதுத் தேர்தல் – வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்ட பிரபோலோ சுபியாண்டோ!

குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு மாநில தொழில்துறை அமைச்சர் பல்வந்த்சிங் ராஜ்புட் பிப் 13 ஆம் தேதி பதிலளித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள 29 மாவட்டங்களில் 2,38,978 பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.  மேலும், பகுதிநேர கல்வி பயின்ற 10,757 இளைஞர்களுக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,  அமைச்சர் வெளியிட்ட தரவுகளின்படி,  அதிகபட்சமாக ஆனந்த்தில் 21,633, வதோராவில் 18,732,  அகமதாபாத்தில் 16,400 பட்டதாரி இளைஞர்கள் வேலைக்காக பதிவு செய்து காத்து உள்ளனர்.  குறைந்தபட்சமாக தேவ்பூமி துவாரகாவில் 2,362 இளைஞர்கள் அரசுப் பணிக்காக பதிவு செய்துள்ளனர்.  அதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளில் வெறும் 32 இளைஞர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,  சட்டப்பேரவையில் காங்கிரஸ் எழுப்பிய விமர்சனத்துக்கு பதிலளித்த அமைச்சர்,  மாநிலம் முழுவதும் உள்ள 46 வேலைவாய்ப்பு அலுவகங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும்,  தகவலை பெறுவதற்காக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் பதிலளித்தார்.

Tags :
GujaratJobsListregisteredunemployedunemploymentyouth
Advertisement
Next Article