'தி பேமிலி மேன் 3' வெப் தொடரின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான வெப் தொடர், ‘தி பேமிலி மேன்’. இதில் பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து 2021-ம் ஆண்டு ‘தி பேமிலி மேன்’ 2 வெளினாது. இதி முக்கிய கதாபாத்திரத்தி தென்னிந்திய நடிகை சமந்தா நடித்திருந்தார். ஆனால் சமந்தாவின் கதாபாத்திரம் ஈழத்தமிழர்களை தவறாக சித்தரிப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.
தற்போது ‘தி பேமிலி மேன்’ வெப் தொடரின் 3ம் பாகம் உருவாகியுள்ளது. இந்தத் தொடரிலும் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த பாகத்தை ராஜ் மற்றும் டிகே உடன் சுமன்குமார் மற்றும் துஷார் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
இந்த நிலையில், தி ஃபேமிலி மேன் தொடரின் 3 ஆம் பாகம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.