”இல்லையென்றால் நீங்கள் பவுலிங்கில் சதமடித்திருப்பீர்கள்” - அர்ஷ்தீபை கலாய்த்த விராட் கோலி...!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
அதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பரிக்கா அணி 47.5 ஓவர்களில் 270 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 39.5 ஒவர்களில் ஒரு விக்கெட் இழந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய அணியில் தொடக்க ஆட்ட காரரான யஸ்யஸ்வி ஜெயிஸ்வால் 121 பந்துகளில் 116 ரன்கள் விளாசினார்.
அதே போல் மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சர்மா 73 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா, கேசவ் மஹராஜ் பதில் அவுட் ஆக அடுத்து களமிறங்கிய அதிரடி காட்டினார். விராட் கோலி 45 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். இதான் மூலம் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியை வென்ற இந்திய அணி, தென் ஆப்பிரிக்கவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இத் தொடருக்கான ஆட்ட நாயகன் விருதை ஜெய்ஸ்வாலும், தொடர் நாயகன் விருதை விராட் கோலியும் பெற்றனர்.
போட்டியின் முன்னதாக் போடப்பட்ட டாஸில் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் டாஸ் வென்ற பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 20 போட்டிகளில் டாஸில் தோற்றது. அதாவது இந்திய அணி கடைசியாக கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக டாஸில் வெற்றி கண்டிருந்தது.
இந்த நிலையில் இந்திய அணி வீரர் அர்ஷ்தீப் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். போட்டிக்கு பின் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில், இந்திய அணி வீரர்களான விராட் கோலி மற்றும் அர்ஷ்தீப் சிங்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அந்த வீடியோவில் முதலில் பேசிய அர்ஷ்தீப் சிங்க் , “இலக்கு குறைவாக இருந்தது, இல்லையென்றால் இன்னொரு சதமடித்திருப்பீர்கள்” என கோலியிடம் கூறினார். அதற்கு பதிலளித்த விராட் கோலி, “நாம் டாஸை வென்றதற்கு நன்றி சொல்லுங்கள், இல்லையென்றால் பனிப்பொழிவு காரணமாக நீங்கள் பவுலிங்கில் சதமடித்திருப்பீர்கள்” என அர்ஷ்தீப் சிங்கை கலாய்த்தார்.
View this post on Instagram