For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆஸ்கர் 2024 | விருதை தவறவிட்ட இந்திய ஆவணப்படமான “டு கில் எ டைகர்”...

10:35 AM Mar 11, 2024 IST | Web Editor
ஆஸ்கர் 2024   விருதை தவறவிட்ட இந்திய ஆவணப்படமான “டு கில் எ டைகர்”
Advertisement

96-வது அகாடமி விருதுக்கு டு கில் எ டைகர் ஆவணப்படத் திரைப்படப் பிரிவில் விருதை பெறும் என எதிர்பார்த்த நிலையில் இப்படத்திற்கு விருது கிடைக்கவில்லை.

Advertisement

உலக அளவில் 2023ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கும்,  அதில் பங்கேற்றவர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவிக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.

இந்த ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் சிறந்த ஆவணப்பட பிரிவில் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட டூ கில் ய டைகர் (To Kill a Tiger)  என்ற படம் இடம் பெற்றிருந்தது.  கடந்தாண்டு ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் மற்றும் ஆவணப்படமான தி எலிஃபண்ட் விஸ்பெரர்ஸ் ஆகிய 2 படங்களும் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்தன.  இந்நிலையில் டூ கில் ய டைகர் (To Kill a Tiger)  படமும் ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக  இருந்தது.

ஆனால், 96-வது ஆஸ்கர் விருது விழாவில்,  ஆவணப்படங்களுக்கான பிரிவில்,  இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 'டு கில் எ டைகர்' ஆவணப்படம் விருதை பெறவில்லை. ஆவணப்படங்களுக்கான விருதை '20 டேய்ஸ் இன் மரியுபோல்' வென்றுள்ளது.

இந்த படத்தை டெல்லியைச் சேர்ந்த நிஷா பஹுஜா என்பவர் இயக்கியுள்ளார்.  இந்த படம் தனது 13 வயது மகள் 3 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை எதிர்த்து ரஞ்சித் என்ற தந்தை நடத்தும் சட்ட போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தை கார்னிலியா பிரின்சிப் மற்றும் டேவிட் ஓபன்ஹெய்ம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இதுவரை வென்ற விருதுகள் எத்தனை? 

டூ கில் ய டைகர் படம் உலக திரைப்பட விழா,  Siff திரைப்பட விழா,  நியூயார்க் இந்தியன் திரைப்பட விழா,  Stuttgart இந்திய திரைப்பட விழா,  மம்மூத் திரைப்பட விழா,  Docaviv விழா, டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட 16 திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்துள்ளது.  நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.  இதன் ட்ரெய்லரை பார்க்கும்போதே மனதை பதைபதைக்க செய்யும் ஒரு கதை என்பது நமக்கு விளங்குகிறது.

Tags :
Advertisement