"ஒரு மாம்பழ சீசனில்..." - விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு!
விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்திற்கு ”ஒரு மாம்பழ சீசனில்..." என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
முண்டாசுப்பட்டி, ராட்சசன் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம்குமார். முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் விஷ்ணு விஷாலை இயக்கி 'ராட்சசன்' திரைப்படத்தின் மூலம் வெற்றியைக் கொடுத்தார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன், ராம்குமார் விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிநடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த அவரது பிறந்தநாளை முன்னிட்டு விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியது. இப்படத்தை ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' படம் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான 'லால் சலாம்' திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் புதிய படத்த்திற்கு 'ஓர் மாம்பழ சீசனில்' என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.