Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் - சென்னையில் 25 இடங்களில் நடத்த ஏற்பாடு

09:33 AM Dec 12, 2023 IST | Jeni
Advertisement

நடிகர் விஜய்-ன் அறிவுறுத்தலின்பேரில், சென்னையில் ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

Advertisement

இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

“மிக்ஜாம் புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகின்ற 14-ம் தேதி காலை 8.05 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.

வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்க உள்ள இம்மருத்துவ முகாம்கள் வழியாக குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்களின் நலன் காக்கும் இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”

இவ்வாறு புஸ்ஸி ஆனந்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
#medicalcamp#ThalapathyVijayactorvijayChennaiCycloneMichaungTVMIVijayMakkalIyakkam
Advertisement
Next Article