Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Tamilnadu-ல் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற அரசாணை வெளியீடு! ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம்!

03:58 PM Sep 03, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற 5.20 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் 26 பள்ளிகளுக்கு இந்த நிதி வழங்கப்படும். இந்தப் பள்ளிகளில் ஆற்றல் திறனை மேம்படுத்த சூரிய ஆற்றலின் உதவியுடன் சூரிய சக்தி மோட்டார் பம்புகள் பயன்படுத்துதல், மழை நீர் சேகரிப்பை நடைமுறைப்படுத்துதல், மக்கும் உரம் தயாரித்தல், காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்கள் உருவாக்குதல், பழங்கள் தரும் மரங்களை நடுதல், நீர் பயன்பாட்டை குறைத்தல், கழிவு நீரை மறுசுழற்சி செய்தல், நெகிழி இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதல் மற்றும் ஏனைய பசுமைப் பணிகளை இப்பள்ளிகள் மேற்கொள்ளும்.

இது மட்டுமல்லாது பள்ளியின் அனைத்து மின்தேவைகளும் சூரிய ஆற்றல் உற்பத்தி மூலம் பெறப்படும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :
பசுமை பள்ளிகள்DMK GovtGOGovernment OrderGovt schoolsGreen Schoolsnews7 tamiltnTN Govttn schools
Advertisement
Next Article