"இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்" - பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி குடுக்கும் விதமாக மே 7ம் தேதி இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதனை அடுத்து இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்து பேசுச்சுவார்தை நடத்தினர். இதனால் மே10 ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் கைபர் பக்துங்வா மாகாணம் அபோட்டாபாத் நகரில் ராணுவ கேடட் பயிற்சி பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் சையத் அசிம் முனீர் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, "அணுசக்திமயமான சூழலில் தற்போது போருக்கு இடமில்லை. அதேபோல், தங்கள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாங்கள் ஒருபோதும் மிரட்டப்பட மாட்டோம், வார்த்தைகளால் வற்புறுத்தப்பட மாட்டோம், ஒரு சிறிய ஆத்திரமூட்டும் தூண்டுதலுக்குக் கூட எந்த தயக்கமும் இல்லாமல் தீர்க்கமான பதிலடி கொடுப்போம். பாகிஸ்தானை நிலைகுலையச் செய்ய பயங்கரவாதத்தை ஓர் ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது. இதுவரை இந்தியாவின் அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு நமது ஆயுதப் படைகள் தொலைநோக்கு திறன்களை வெளிப்படுத்தியுள்ளன.
பாகிஸ்தானுக்கு ஒரு சில பயங்கரவாதிகளால் தீங்கு விளைவிக்க முடியாது. சர்வதேச விதிமுறைகளின்படி தான் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடு. நாங்கள் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வலுவான உறவு வைத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.