For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேரளாவில் பெண்ணை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு!

கேரள மாநிலம் வயநாட்டில் பெண்ணை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
09:31 PM Jan 26, 2025 IST | Web Editor
கேரளாவில் பெண்ணை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு
Advertisement

கேரள மாநிலம் வயநாடு அருகே மானந்தவாடி பஞ்சராகொல்லி பகுதியில், நேற்று
முன்தினம் காப்பி தோட்டத்திற்கு பணிக்கு சென்ற ராதா என்பவரை புலி தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதனிடையே மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கேட்டும், சம்பந்தப்பட்ட புலியை சுட்டு கொல்ல வேண்டும் எனவும் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து  புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க, வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் உத்தரவிட்டார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட புலியை பிடிக்க வனத்துறையினர் மற்றும் RRT குழுவினர் என ஏழு குழுவினர் இரண்டாவது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வனத்தில் தேடுதல் பணியில் ஈடுப்பட்டிருந்த RRT குழுவை சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் மீது புலி பாய்ந்தது. இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புலியை கண்டால் சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மானந்தவாடி நகராட்சிக்கு உட்பட்ட பஞ்சரா கொல்லி, மேல சிலக்கரை , பிலாகாவு, முன்று ரோடு, மணியன் குண்ணு போன்ற பகுதிகளுக்கு 48 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிமுதல் 48 மணி நேரத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும், கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement