Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“திஹார் சிறைக்கு போக ஓபிஎஸ் தயாராகி விட்டார்..!” - இபிஎஸ் பேட்டி

03:15 PM Dec 27, 2023 IST | Jeni
Advertisement

டெல்லி திஹார் சிறைக்கு போக ஓபிஎஸ் தயாராகி விட்டதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

“சென்னையில் மழை பெய்வதற்கு முன்பே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தும்,  இந்த திமுக அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பருவமழை தொடங்குவதற்கு முன்பே முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் புயல், மழை காலங்களில் அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதிமுக சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன. இந்த முறை மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்கப்படவில்லை. அதே போல் தென்மாவட்டங்களிலும் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாமிரபரணி ஆற்றங்கரை மக்களை பாதுகாப்பாக தங்க வைத்திருக்கலாம்.

கடந்த 19-ம் தேதி நான் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டேன். ஆனால் அதுவரைக்கும் அமைச்சர்கள் யாரும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவில்லை. ‘கஜா’ புயலின் போது நாங்கள் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டோம். மக்கள் பாதிப்படைந்த போது கூட இங்குள்ள பல கட்சிகள் இன்னும் குரல் கொடுக்கவில்லை. மத்திய அரசு நிதி கொடுக்காதது தவறு என்று சொல்லிவிட்டோம். மத்திய அரசும் - மாநில அரசும் மாறி மாறி குறைசொல்வதை விட்டு விட்டு, மக்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும்.

கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு முடிவு செய்யப்படும். அதிமுக - பாஜக கூட்டணி கிடையாது என்று சொல்லிவிட்டோம். இது எங்கள் கட்சி பிரச்னை. உங்களுக்கு ஏன் பதற்றம்? திமுக வெற்றி பெற்றுக் கொண்டே இருந்த கட்சியா? 66 இடங்களில் அதிமுக எம்.எல்.ஏ வெற்றி பெற்று இருக்கின்றனர். திமுகவிற்கும் அதிமுகவிற்கும் 1 சதவீத வாக்கு மட்டுமே வித்தியாசம். 45 பேர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.

டெல்லி திஹார் சிறைக்கு போக ஓபிஎஸ் தயாராகிவிட்டார். என் மீது ஏதாவது பழியை சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார். ஆர்.எஸ்.பாரதி என் மீது வழக்கு போட்டார். உச்சநீதிமன்றம் வரை சென்றேன். திமுகவில் முன்வரிசையில் இருக்கும் அமைச்சர்கள் பலர் அடுத்து காத்திருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ரூ.2 கோடி கடன் கொடுத்தாராம் ஓபிஎஸ். இடையில் தான் ஓபிஎஸ் கட்சிக்கு வந்தார். போடிநாயக்கனூரில் ஜெயலலிதா போட்டியிட்ட போது ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவிற்கு ஏஜென்ட்டாக இருந்தவர் ஓபிஎஸ்.

பல வழக்குகளை ஓபிஎஸ் சந்தித்துக் கொண்டு இருக்கிறார். பல வழக்குகளில் அவர் உள்ளே போவார். 1974-ல் இருந்து இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் நாங்கள். எவ்வளவு முயற்சி செய்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஓபிஎஸ் துரோகம் செய்கிறார்.

மின் கட்டணத்தால் சிறு குறு தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இனியாவது மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.”

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Tags :
AIADMKEdappadipalanisamyEPSOPanneerselvamOPS
Advertisement
Next Article